Promise Message

கர்த்தர் உன்னோடு இருந்தால்!​

இஸ்ரவேலர் மீதியானியரால் அதிகமாகச் சிறுமைப்படுத்தப்பட்ட நாட்களில் வாழ்ந்தவன் தான் கிதியோன். மீதியானியரின் நிமித்தம் இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி முறையிட்டனர். மீதியானியர் கையில் சிறுமைப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கத் தேவன் கிதியோனை தெரிந்தெடுத்தார். கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பி கிதியோனிடம், “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்… உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ” (நியா 6:12) என்று கூறி அனுப்புகிறாார்.

கர்த்தருடைய தூதன் கிதியோனிடம் அவன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி சர்வாங்க தகனபலி செலுத்த சொன்னபோது, கிதியோன் கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான். ஆனாால் அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினால், அதைப் பகலில் செய்யாமல், இரவிலே செய்தான் (நியா.6:26,27). தன் தகப்பனின் பலிபீடத்தையே பகலில் தகர்த்துபோட பயந்த கிதியோனை, வெட்டுக்கிளிகளைைப் போலப் பரவியிருந்த மீதியானியரை முறியடிக்கக் கர்த்தர் சொல்கிறாார்.

கிதியோன் பயந்த சுபாவம் கொண்டவன். கர்த்தர் அவன் பயந்த குணத்தைை நன்கு அறிந்தவராய், அவனிடம் நீ போகப் பயப்பட்டாயானால், முதலில் நீயும் உன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையினிடத்திற்குப் போய், அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்: பின்பு சேனையிடத்திற்குப் போக, உன் கைகள் திடப்படும் என்றார் (நியா. 7:9-15). பயந்த சுபாவமும், பலவீனமான விசுவாசமுள்ளவனாயும் இருந்த கிதியோனை தேவன் தெரிந்தெடுத்து, அவனை விசுவாசத்தில் பலப்படுத்திப் பராக்கிரமசாலியாக மாற்றினார். இதனால் வெட்டுக்கிளிகளைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பரவியிருந்த மீதியானியரை, கிதியோன் தேவனின் துணையோடு மிக எளிதாக முறியடித்தான். பயந்துக் கொண்டிருந்த கிதியோனைக் கொண்டு பெரிய இரட்சிப்பை தேவன் கட்டளையிட்டாார். அம்மோனியரும், மீதியானியரும், அமலேக்கியரும், கிழக்கத்திப் புத்திரரும் சிதறடிக்கப்பட்டு சத்துருக்களை மடங்கடித்து தன்னுடைய தேசத்தை மீட்புக்கு கொண்டு வந்தான். உங்களைக் கொண்டும் தேவன் செய்ய வேண்டுமானால், உங்களை ஒப்புக்கொடுக்கும்போது, தேவன் உங்களைக் கொண்டும் நிறைவேற்றுவார்.